பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்
பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ உறுநிலம் உறைய புள்பறந் தற்றே முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள் வதுவைப் பருவத்து துடிஇடை முளையல் அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான் வரிப்படை வேட்புற காந்த ளகத்து மகற்படை அன்ன மகட்படை மறவம் அகத்தே உயிர்த்த அறநெறி தழீஇ விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே தொல்லூர் கிழான் விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து; தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு…