கலைச்சொல் தெளிவோம்! 164.பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி
கலைச்சொல் 164. பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி – araskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன. அவை வருமாறு: பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி- Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia . இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்
கலைச்சொல் 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…
கலைச்சொல் தெளிவோம்! 109. சல வெருளி;110. சாவு வெருளி;111. சிவப்பு வெருளி;112. சூன்று வெருளி
கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90) சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி-Hydrophobia [சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.] கலைச்சொல் 110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia…
கலைச்சொல் தெளிவோம்! 101. கருதுபு வெருளி 102. கழுது வெருளி 103. காற்று வெருளி104. பறத்தல் வெருளி
101. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia கருதி (2), கருதிய (1), கருதியது (1), கருதியாய் (1), கருதின் (1), கருதுபு(1), கருதும் (2), கருதுவிர்(1) என்னும் சொற்களைச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். எண்ணிக் கருதுவதால் வருவதுதானே கருத்து. சிலருக்குக் கருத்தைக் கேட்டாலேயே தேவையற்ற பேரச்சம் ஏற்படும். கருத்துகள், அறிவாராய்ச்சித் திறன் ஆகியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia 102. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633) கழுது புகவயர…
கலைச்சொல் தெளிவோம்! 92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள்
92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள் உயர்பு வெருளி-Acrophobia உயர்நிலை வெருளி-Altophobia உயர வெருளி-Hypsiphobia ஆழம் பற்றிய அச்சம் வருவதுபோல், உயரம் பற்றிய அச்சமும் இயல்புதானே! சங்கப்பாடல்களில் உயர்(210), உயர்க்குவை(1), உயர்க(3), உயர்த்த(8), உயர்த்து(4), உயர்திணை(1), உயர்ந்த(15), உயர்ந்ததேஎம்(1), உயர்ந்தவர்(1), உயர்ந்தவள்(1), உயர்ந்தன்று(4), உயர்ந்திசினோர்(1), உயர்ந்து(17), உயர்ந்துழி(1), உயர்ந்தோர்(8), உயர்ந்தோருலகு(1), உயர்ந்தோர்நாடு(1), உயர்ந்தோருலகம்(1), உயர்ந்தோன்(1), உயரிநிலைஉலகம்(7), உயர்நிலைஉலகு(5), உயர்பு(4), உயர்வு(2), உயர(2), உயரி(2), உயரிய(6), உயரும்(1), உயருலகு(1) என மலையுச்சி போன்ற உயரமான இடங்களைக் குறிக்கும் வகையிலும் உயரத்தின் அடிப்படையில் பண்பில்,…
கலைச்சொல் தெளிவோம்! 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia
90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். வாழ்(17), வாழ்க்கை(60), வாழ்க(25), வாழ்கல்லா(1), வாழ்குவன்(1), வாழ்ச்சி(1), வாழ்த்த(10), வாழ்த்தி(20), வாழ்த்தினர்(1), வாழ்த்தினெம்(1), வாழ்த்தினேம்(2), வாழ்த்து(2), வாழ்த்தும்(2),…
கலைச்சொல் தெளிவோம்! 89. இருள் வெருளி
89. இருள் வெருளி- Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இருள் (164), இருளி (6), இருளிய (9), இருளின் (1) என இருள் தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுருகு ஆற்றுப்படை : 10) அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, (பெரும்பாண் ஆற்றுப்படை : 1) குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் (மதுரைக் காஞ்சி : 195) உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் (நற்றிணை : 68.8) நிலவும் இருளும்…
கலைச்சொல் தெளிவோம்! 88. ஆழ்பு வெருளி
88. ஆழ்பு வெருளி-Bathophobia ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் கொண்டு, ஆழம் பற்றிய…
கலைச்சொல் தெளிவோம்! 87. அனைத்து வெருளி
87. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது. எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர். அனைத்தும், புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266) கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22) அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68) அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16) இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் அறி அறிவு ஆகாச் செறிவினை…
கலைச்சொல் தெளிவோம்! 85 & 86. அழுக்கு வெருளி & குப்பை வெருளி
85. அழுக்கு வெருளி – Automysophobia/Mysophobia 86. குப்பை வெருளி-Rupophobia ‘அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல். புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். பின்னர உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன. தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி-Automysophobia/Mysophobia அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை…
கலைச்சொல் தெளிவோம்! 84. அழிவுவெருளி-Atephobia
84. அழிவுவெருளி-Atephobia அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய…
கலைச்சொல் தெளிவோம்! 80-83 கூர்மை தொடர்பான வெருளிகள்
80-83 கூர்மை தொடர்பான வெருளிகள் கூர் (109), கூர்த்த (1), நுனி (1) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. முனை என்பது போர்க்களப் பகுதியைக் குறிக்கின்றது. நுனை (17) கூரிய முனையைக் குறிக்கின்றது. அயில்(9) கூர்மையையும், கூர்மையாக உள்ள வேலையும் குறிக்கின்றது. வை (49) என்னும் சொல் கூர்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூர்முனையைக் குறிக்க வைந்நுதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி-Enetophobia கூர்…