தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ – உரையரங்கம்

சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக்  கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி,  தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை   முதலான பல அமைப்புகளுடன் இணைந்து  நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர்  மழலையர்  – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார்.   த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார்.    இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார்.  முனைவர் க.ப. அறவாணன்…

தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! – உரையரங்கம், சென்னை

எண்என்ப   ஏனை   எழுத்துஎன்ப   இவ்விரண்டும் கண்என்ப   வாழும்   உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392) தமிழ்ப்பள்ளிகளை          மூடாதே! உரையரங்கம் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ), (அருங்காட்சியகம் எதிர்ப்புறம்), எழும்பூர், சென்னை 600  008 தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி வரவேற்புரை  :         த.தமிழ்த்தென்றல் தலைமை      :               இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை:      முனைவர் க.ப. அறவாணன் கருத்துரை   : தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் கல்வியாளர் முனைவர் இ.மதியழகி எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர் கல்வியாளர்…

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் –  நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் தமிழ்நாட்டில் 1951  இல் 20.80 % மக்கள்  படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில்  31.70 % மக்களும்  பெண்களில் 10.10 % மக்களும்தான்  படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல்  ஆண்களில் 51.59% ,  பெண்களில் 21.06%  ஆகவும் மொத்தத்தில்  36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54%    பெண்கள் 30.92%     மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம்  ஆண்கள் 86.81%  பெண்கள் 73.86% ஆகும். எல்லாக்…

வெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு விழா

மார்கழி 09, 2048 ஞாயிறு 24.12.2017 மாலை 4.15முதல் இரவு 8.15 வரை பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர் வெற்றிச்செழியனின் நம்பிக்கை நாற்றுகள் நூல் வெளியீட்டு விழா   வெளியீடு :  திருமிகு பேரரசி பெறுநர் : திருஉலோ.சத்தியராசு                         பொறி.தி.ஈழக்கதிர்     வளமை பதிப்பகம் 9840977343, 044 2478 2377

பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி – பண்பாட்டு உணவுத்திருவிழா

மாசி 16, 2047 / 28.02.2016 அன்புடையீர் வணக்கம், நமது தமிழே நமக்கு வளம் நமது உணவே நமக்கு  நலம்.. அன்புடன், வெற்றிச்செழியன்

பண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி

அன்புடையீர், வணக்கம்.                நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள்.  நன்றி! ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343

காட்டுப்பள்ளிக்கூடம் – நூல் வெளியீடு

வெற்றிச்செழியனின் சிறுவர் பாடல்கள் “காட்டுப்பள்ளிக்கூடம்”  நூல் வெளியீட்டு விழா தை 13, 2045 / நவம்பர் 29 குன்றத்தூர்

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்

  தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் கோபி பள்ளி ஏன் தொடங்கப்பட்டது? மேடைகளில் ஏறித் தமிழ்ப்பெருமை பேசுவது, பட்டிமன்றங்களில் தமிழைக்கொட்டி முழங்குவது, கருத்தரங்கம் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்ப்பது, பக்கம், பக்கமாக எழுதித் தமிழ்ப்பயிரை வளர்ப்பது, இவற்றை எல்லாம் முழுமையான தமிழ்ப்பணி என்று கருதாமல், மானுடத்தின் உயிரான கல்வியை, தமிழர்களின் உயிர் வேரான தமிழ்வழிக்கல்வியை ஓங்கிப்பிடித்து, கல்விப்பணி செய்வதுதான் தமிழ் இனத்தின் கேடு நீங்கச் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது என எண்ணி, எதிர்கால நாற்றங்கால்களான நம் தமிழ்க் குழந்தைகளை, நமது…

சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்

சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது.  அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன.  அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது. தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது.  தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது.  சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது. வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது.  அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது.  தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது. …

அச்சம்

                                                  கல்வியாளர் வெற்றிச்செழியன் paventharthamizhpalli@gmail.com   அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால்             உதுவும் நடக்குமா ! அஞ்சி நாமும் முடங்கிவிட்டால்             உயிரும் நிலைக்குமா !   அச்சம் உள்ள நிலையினிலே             அமைதி கிடைக்குமா ! அஞ்சி வாழும் மக்களிடை             மகிழ்ச்சி தோன்றுமா !   அச்சம் பெற்ற மூளையிலே             அறிவு மலருமா ! அஞ்சி வாழும் அடிமையரின்             கொள்கை பிழைக்குமா ! அச்சம் கொண்ட உறவினிலே             உண்மை இருக்குமா ! அச்சம் உள்ள உயிர்களிடை…