புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் – வெற்றிவேலன்
தமிழ் மகனே, திரைகடல் ஓடித் திரவியம் காண இருண்ட கண்டம் இலங்கை, பர்மர சென்றாய்; உழைத்தாய்; கல்லை உடைத்தாய்; பிற நாட்டின் முன்னேற்றம் கருதி மாட்டினும் இழிவாய் முனைந்து உழைத்தாய்! ஈட்டியதென்ன? இழி சொல் பகைமை காட்டி நின்றனர், உன் உழைப்பால் உயர்ந்தோர்! அயர்வைக் கருதாது வியர்வை சிந்தி உயர்வைக் கருதி உழைத்தாய் பிறருக்கு! உன்றன் நேர்மையை உணர்ந்த மற்றோர் குன்றா உழைப்பை உறிஞ்சி உயர்ந்தனர்; சாற்றைப் பிழிந்து சக்கை எறிவது உலகின் இயற்கை; பாலைக் கறந்து, பின் பசுவைக் கொல்லும் கயமை…