ஒளவையார்:2 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 11 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய்…
தோல்வி என்பது தோல்வி அல்ல! – ஈழன்
தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் எதிர்ச்சொல் மாத்திரமே! ஒவ்வொரு முறையும் உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை! அதன் பொருள் தோல்வியல்ல! நீ எவ்வாறு வெற்றி கொள்வது என்பதற்கான படிப்பினைகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்! அதிகம், அதிகம் நீ வெற்றிகளை தவறவிடுகிறாய் என்றால்……….. அதிகம், அதிகம் நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள்! தோல்வி என்பது உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை வெற்றிகளே! தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் மறைபொருள்களே! உன் முயற்சிக்கான வெற்றிகளே! உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க! பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது. எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்! தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர். நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…
தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!
தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி! தேர்வு முறையில் நடுநிலையைப் பின்பற்றுக! மக்கள் தொலைக்காட்சி நீங்கலான தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ்க்கொலையையே தொழிலாகக் கொண்டுள்ளன. சிறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் கதைத் தொடரை ஒளிபரப்பாமல் பண்பாட்டுக் கொலைபுரியாமல் தொண்டு புரிகின்றன. அவ்வாறிருக்க விசய் தொலைக்காட்சி – அதுவும் சீ சீ என்பதுபோல் பெயருக்குப்பின்னர் பாட்டியம்மா சொல்வதும் முதல் எழுத்துகளைத் தமிழில் குறிப்பிடும் தொகுப்பாளரும் அவ்வாறே சொல்லத் தொடங்கியுள்ளதும் பாடல்நிகழ்ச்சிகளில்கூட சாங்கு, சிங்கர், சூப்பர் போன்று ஆங்கிலச் சொற்களைக் கூறுவதையே கடமையாகக் கொண்டுள்ளதுமான விசய் தொலைக்காட்சி –…
வெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!
12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அடுத்து, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வர உள்ளன. (இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வர உள்ளன.) இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்து வெல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்! வெற்றி கண்டு மயங்காதீர்! பத்தாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்கள் அனைவரும் அவ்வாறே பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்களா என்றால் இல்லை என்பதே நடைமுறை. இரண்டாண்டில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என்ன? அதே போல், 12…