வெளியாரை வெளியேற்று! – தாயகத்தோர் வாழ்வுரிமை மாநாடு
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!! 1956ஆம் ஆண்டு ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழ்நாடு பிறந்தது. ஆனால், இன்று, அச்சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் அதிகளவில் வெளி மாநிலத்தவர்கள் நுழைந்து கொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் மட்டும் 43 இலட்சம் பேர் இவ்வாறு குடியேறியுள்ளனர். இதன் காரணமாகத், ‘தமிழ்நாடு- தமிழர்களின் தாயகம்’ என்ற அடிப்படை நிலையே மாறிவருகின்றது. மேலும், தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்தின் தலைமைப் பொறுப்புகளிலும், பணியாளர்கள் எண்ணிக்கையிலும் அயல் இனத்தாரே…