வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு, தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு, வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு, காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு! வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட, சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு! வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன், வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு! வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே, வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய், வான்புகழைக் கொண்டதமிழ் நாட்டுக்குள்ளே கடலாய், வக்கிரகுணச் சாக்கடைகள் வீதியெங்கும்…
வேட்டி தீண்டாமை ஒழியட்டும்! தேசிய இனங்களின் உரிமைகள் வெல்லட்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன் அண்மையில்(ஆனி 27, 2045 / சூலை 11, 2014 வெள்ளிக்கிழமை) இந்திய மட்டைப்பந்தாட்ட மன்றத்தின் சென்னை அமைப்பில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டு அழைப்பிதழுடன் அலுவலக ஊர்தியில் சென்றிருந்த நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞர் காந்தி, மதுரை வழக்குரைஞர் சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் மன்றத்தில் நுழைந்து விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்டனர். தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடு என அனைத்துத் தரப்பாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச் செயல் கண்டிக்கப்படுவதுடன் இத்தகைய மோசமான போக்கு நிறுத்தப்பட…