வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்க!
இளம் மாணவர்கள் வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்ள வேண்டும் வேளாண்மைக் கல்லூரி தலைமையர்(டீன்) பேச்சு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேளாண்மைக் கல்லூரியில் ஒரு நாள் ( 18/03/2016) தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாகச் சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரிக்குச் சென்றனர். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வேளாண்மைக் கல்லூரிக்குக் களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லூரி வணிகப் பிரிவு மேலாளர்…
செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்! – வைகை அனீசு
செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் கண்மாய் கரை உடைந்து குளத்திற்குச் செல்லும் தண்ணீர் வீணாகிறது. செயமங்கலம் அருகே உள்ள கண்மாய்க்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்பொழுது பெய்த கனமழையால் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களுக்குச் சென்றது. வயல்களில் ஏற்கெனவே நெல்களை நடுவதற்கு உழவர்கள் நெற்பயிரைப் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரை உடைந்ததால் நெற்பயிர்களுக்குள் தண்ணீர் உள்ளே சென்று அனைத்தும் வீணாயின. அதே போல கண்மாயில் மீன்குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனால் குளத்திலிருந்து…
ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்
– கே.சி.சிவபாலன் ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை – 03 இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில், சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்களை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக…