மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர் வருகை
அருவினைகள் படைக்கும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு மாகாணக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர் வருகை மலையகத்தில் காணப்படும் தேசியக் கல்லூரிகளில் நிலவும் நிருவாகச் சீர்கேடுகளினால் மலையத்திற்கான தேசியக் கல்வியற் கல்லூரிகளின் எதிர்காலம் குறித்துக் கவலை அடைய வேண்டிய நிலை யாவரும் அறிந்ததே! இதற்குக் காரணம் கல்லூரியின் முதன்மை குறித்து அக்கரை இன்றிச் செயலாட்சியர் செயற்பட்டமையாகும் என்று அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்போது இந்தக் கல்வியற் கல்லூரியின் செயற்பாடுகள் ஒரளவு மாற்றத்தைக் கொண்டிருந்தாலும் இன்றும் சில மாதங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு …
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள்
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், ஆடி 17, 2047 / ஆகத்து 01, 2016, அன்று (01) தன் 64ஆவது பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா நம்முயிர்காப்போம்(எசு..ஓ.எசு.) சிறார் ஊரில் சிறுவர்களுடன் கொண்டாடினார். (படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்)
பதுளை சரசுவதி தேசியக் கல்லூரி : கட்டடத் திறப்பு விழா & அடிக்கல் நாட்டு நிகழ்வு
பதுளை சரசுவதி தேசியக் கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடிக் கட்டடத் திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (ஆடி09, 2047 / சூலை 24, 2016) சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிகழ்வில், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், அமைச்சர் அரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்து, தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேசு, ஊவா மாகாண அவை உறுப்பினர்களான ஆ.கணேசமூர்த்தி, வே.உருத்திரதீபன், எம்.சச்சிதானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]
மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்
மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன் இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு சென்னையில் ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார். இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…
யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா
யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா ஆனி 20, 2047 / சூலை 04, 2016 அன்று முதன்மை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணைஅதிபர் த.நிமலன், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் சி.ரகுபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் விசாகனன், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் (இ)யோகேசுவரன் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை
மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில் வருகை புரிந்தார். அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா
வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா வெள்ளவத்தை இராமகிருட்டிணா கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தலைமை விருந்தினர்களாகத் தேசிய இணைவாழ்வு – கலந்துரையாடல் – அரசவினை மொழிகள் அமைச்சர் மனோ.கணேசன், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மேல் மாகாண அவை உறுப்பினர் சண். குகவரதன், இடைநிலைக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி த.இராசரத்தினம், கொழும்பு தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி சீ.கே.இலங்கதிலக முதலான பலர் கலந்து கொண்டார்கள். இத்துடன் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை…
கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்
கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம் மாநிலக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கொழும்பு அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப் பிரிவுற்கு வைகாசி 14, 2047 / 27.05.2016 அன்று அதிரடி வருகை ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ்ப் பிரிவிற்கான துணை அதிபர், தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் குறைபாடுகள் குறித்துக் கலந்து உரையாடினார். இதன் போது மாநிலக்கல்வி அமைச்சரின் செயலாளர் திசஃகேவாவித்தான, மேலதிகச் செயலாளர் ஃகேவகே, கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்குப் பொறுப்பான…
சின்னம் அணிவித்தலும் நீர் வழங்கலும்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பாடசாலை மாணவர்களுக்குச் சின்னம் அணிவித்தலும் பாடசாலைக்கான நீர் வழங்கலும் நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர் வழங்கல் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்குக் கையளித்தல் ஆகிய நிகழ்வு சித்திரை 26, 2047 / மே 09,.2016 அன்று மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்,…
மே நாள் தொடர்பான கலந்துரையாடல்
மே நாள் தொடர்பான கலந்துரையாடல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாள் நிகழ்வு தலவாக்கலையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியான மலையக மக்கள் முன்னணியின் மே நாள் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் தலவாக்கலையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முண்னனியின் தலைவரும் கல்வித்துணைஅமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முண்னனியின் செயலாளர் யு. இலாரன்சு, நாடாளுமன்ற உறுப்பினர் யு.அரவிந்தகுமார், மத்திய மாகாண அவை உறுப்பினர் சு. இராசாராம் முதலான கட்சியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். :
பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்
பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பாக சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மத்திய மாகாண அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள், வீடமைப்பு மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]