அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு
அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு மலையகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள் அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது
20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம் நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல்…
தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத் தலவாக்கலையில் நடாத்துவதற்கு மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்! தொழிலாளர் நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …
இராமாயணப் பூமி இலங்கை! – வே.இராதாகிருட்டிணன்
இராமாயணப் பூமி இலங்கை! “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப் படுகின்றது” எனக் கூறுகின்றார் கல்வி அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின்…
கொழும்பு கம்பன் விழா 2016
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053
மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் கணிணிப் பிரிவுத் தொடக்கம்
கணிணிப் பிரிவுத் தொடக்கம் மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட கணிணிப் பிரிவினைக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் திறந்து வைத்தார். இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பா. திருஞானம் – 0777375053 thirunewsfirst@gmail.com
மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் வணிக விழா
வணிக விழாவும் மாணவர்கள் சிறப்பிப்பும் மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் வணிக விழாவும் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும் மாத்தளையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது வணிகமன்றத்தின் கலை நிகழ்வும் இடம் பெற்றது. இச் நிகழ்விற்குக் கல்வி அதிகாரிகள், மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலிய பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம் – 0777375053