துலுக்கப்பயலே! 5 – வைகை அனிசு
(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015 தொடர்ச்சி) 5 இராவுத்தர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாதிரங்கோட்டை என்ற ஊர். அங்கு இராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் நுழைவு வாயிலில் எட்டடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரைச் சிலையும், அதன் அருகில் ஐயனார் சிலையும் உள்ளன. கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசை பயமுறுத்தும் கண்களுடன் ஐயனார் காட்சியளிக்கிறார். ஐயனார் சிலையின் தலையில் முசுலிம்கள் அணியும் குல்லா உள்ளது. இவரைப் பெரிய இராவுத்தர்…
திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!
திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்! நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி சுற்றுலா…
தேவதானப்பட்டியில் இரண்டாம் போகம்
தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் அறுவடைக்குத் தயாரான நிலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் நெல் பயிரிடலுக்கு உழவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இப்பகுதியிலுள்ள நெல்வயல்கள். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் போக உழவுக்கு ஆயத்தமாகி தயாராகி வருகின்றன நெல்வயல்கள். தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நெல்வயல்கள் தரிசாகக் கிடந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகள்,…
ஆளுங்கட்சியின் வன்முறைக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை
ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் சாலைமறியல்! காவல்நிலையம் முற்றுகை! பதற்றம்! தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களும் தங்களுடைய ஆளும்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற்காக, அடுத்தவர்களுக்குக் கொடுத்த விலையில்லா மின்னுரல், மின்னரவை, மின்விசிறி போன்றவற்றை…
சங்கரமூர்த்திபட்டியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு
சங்கரமூர்த்திபட்டிப் பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு தேவதானப்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. முதலக்கம்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், வைகைப்புதூர் பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மின்பொறிகள் மூலம் தண்ணீரைத் திருடுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் ஆற்றின் அருகே மின்இணைப்பு பெற்றுத் தண்ணீரை மின்பொறி மூலம் எடுக்கின்றனர். இவ்வாறாக எடுக்கப்படும் தண்ணீரை நீரூர்திகள், உழுவைகளில் நிரப்பி உணவகங்கள், வீடுகள். விடுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அரசு உழவர்களுக்கு விலையின்றி…
மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்
காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல் தேவதானப்பட்டியில் காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடியாகப் பணம் பெறுகின்றனர். தேவதானப்பட்டியில் அரிசிக்கடை, வைகை அணைப் பிரிவு, பேருந்துநிலையம் முதலான பகுதிகளில் மிதியூர்தி(ஆட்டோ) நிறுத்தங்கள் உள்ளன. இப்பகுதியைச்சுற்றிச் சிற்றூர்கள் உள்ளமையாலும், புகழ்பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளதாலும் ஏராளமான வெளியூர்ப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனர். உட்கிடை ஊர்களுக்கும், காமாட்சியம்மன் கோவிலுக்கும் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிதியூர்தி, பங்கீட்டு மிதியூர்திகளில் பயணம் செய்கின்றனர். இதில் போதிய…