தேனிமாவட்டத்தில் தேசியக்கொடியை ஏற்றியவுடனேயே கீழே இறக்கிய ஊழியர்கள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் குடியரசு நாள் கொண்டாடினார்கள். அப்பொழுது தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடி பறக்கவில்லை. மேலும் முடிச்சு அவிழவில்லை. இதனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை மீண்டும் கீழே இறக்கிப் பேரூராட்சி ஊழியர்கள் கொடியைச் சரிசெய்து மீண்டும் ஏற்றினார்கள். உயிரினும் மேலான தேசியக்கொடியை ஏற்றுவதற்குப் பலவித நிபந்தனைகளும், பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் தேசியக்கொடி ஏற்றுவதில் மிகுந்த கவனத்துடன்…

தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்

தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்   தேவதானப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது.   தேவதானப்பட்டியில் சாவெடு தொண்டு நிறுவனமும் தேனி அரவிந்து கண்மருத்துவமனையும் இணைந்து கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியன.   இதில் கண்ணில் ஏற்படும் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் ஒழுகுதல், மாலைக்கண்நோய், கண்கூசுதல், கண்ணில் சீழ் வடிதல் முதலான பல்வேறு வகையான நோய்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி மருந்துகளும், மருத்துவப் பண்டுவம் தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவப் பண்டுவமும் அளிக்கப்பட்டது.  …

திட்டச்சேரியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம்

திட்டச்சேரிப் பகுதியில் மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் கண்டம்   நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரிப் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது.   திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகள், தனியார் இரத்த ஆய்வு நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இங்குப் பண்டுவத்திற்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான துணிகளையும், இரத்தக்கறை படிந்த பஞ்சுகளையும் சாலைஓரத்திலும், திட்டச்சேரி பேருந்து நிலையம் பின்புறத்திலும் கொட்டி விடுகின்றனர்.   திட்டச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள அரசு /…

காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு

காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும்  இறைமையும்.   குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும்  முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும்,  அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.   இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார்…

சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா

தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா தேவதானப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் அன்னதானம் நிறைவு விழா நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் காருண்யாதேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்குக் கணேசன் தலைமை தாங்கினார்; வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்; சிறப்பு அழைப்பாளராக சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் அழைக்கப்பட்டார்; முகாம் பொறுப்பாளர் பெருமாள்தேவன் நன்றி கூறினார்; கோட்டச்செயலாளர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.   54…

தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன.   தேவதானப்பட்டிப் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பனிகொட்டுகிறது. இதனால் உழவு பெரிதளவில் பாதிப்படைகிறது. குறிப்பாக முளரிப்பூ(உரோசாப்பூ), மல்லிகைப்பூ முதலான பூ வகைகளும் காய்கறிகளும் பனியால் வாடி வருகின்றன. இந்நிலையில் மருந்துப்பொருளாகவும், கிருமிநாசியாகவும் உள்ள வேப்பமரங்களின் இலைகள் பனியால் கருகி இலைகள் உதிர்ந்து வருகின்றன.   மேலும் கடும் பனியால் பொதுமக்கள் தீராத நெஞ்சுசளி, காய்ச்சல், இருமல் போன்றவையால் அதிக அளவில் பாதிப்படைந்து…

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை   தேவதானப்பட்டியில் கையால் தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுவதால் கண்டம்(அபாயம்) ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா, இறப்புச்சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடிவகைகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வெடிகள் உரிமமின்றி உருவாக்கப்படுவை ஆகும்.   சோழவந்தான், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி பகுதிகளில் இருந்து இம்மாதிரியான வெடிகளை வாங்கிவந்து அளவுக்கதிமான கருமருந்துகளை ஏற்றி வெடிக்கச்செய்கின்றனர். இவ்வாறு வெடிகள் அளவுக்கதிமாக அரசு வரையறுத்துள்ள விகித அளவைவிட அதிகமான சத்தத்துடன்…

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லை! – வைகை அனிசு

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் முகம் சுளிப்பு   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதிய பேருந்துநிலையத்தில் இலவசக் கழிப்பிட வசதி இல்லாததால் பட்டப்பகலில் ஆண்கள் பேருந்துநிலையத்தினுள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் முகம் சுளிக்கின்றனர். புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிக்கமேடு, கடற்கரை, ஆசிரமங்கள், தியானமண்டபங்கள், திரௌபதி அம்மன்கோயில் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இதனைக் கண்டு களிப்பதற்குத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை…

விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் – வைகை அனிசு

தமிழர் திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள்   மங்களம் என்றாலே மஞ்சள் என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடம் மஞ்சளுக்கு உண்டு. தெற்காசியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மஞ்சளின் மருத்துவக் குணத்தையும், சிறப்புகளையும் நம்மைவிட மேற்குஆசிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட, போராடி, நாம் திரும்பப் பெற்றோம். குர்க்குமா அரொமெட்டிக்கா என்ற அறிவியல் பெயர் கொண்ட கத்தூரி மஞ்சள் இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுகிறது. இதனுடைய கிழங்கு, மருத்துவப் பயன்மிக்கது….

அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்துக! – வைகை அனிசு

    அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்  தேனி மாவட்டத்தில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம் அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இக்களைச்செடி பயிர் செய்யும் விளைநிலங்கள், பயிரிடப்படாத நிலங்கள், என எல்லா வகை நிலப்பகுதிகளிலும் தீங்கு விளைவிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது. இச்செடியின் வேர்,…

தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்

தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்      நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி.   இந்த ஊராட்சி அருகில் கிறித்தவர்களின் தூய இடமாகக் கருதப்படும் வேளாங்கண்ணி உள்ளது.   தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் ஏறத்தாழ 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படைச் சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி, மின்விளக்கு என்ற எதுவும் செய்து தரப்படவில்லை.   இங்கு ஊராட்சித்தலைவராக இருப்பவர் திருவளர்செல்வி. இவருடைய கணவர்தான் ஊராட்சிமன்றத் தலைவராக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்….

பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்

பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்   கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலைகள் பேரிடரில் உள்ளன. இது குறித்துக் கருத்து செலுத்தவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகமோ கவலைக்கிடமாக உள்ளது.   பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. மேலும், எண்ணெய் இயற்கை எரிவளி நிறுவனம்(ONGC),தென்கன்னெய் வேதிய நிறுவனம் (SPIC), முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் கும்பகோணம் வழியாகவும், நன்னிலம் வழியாகவும் தூத்துக்குடி, சென்னை முதலான பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக 4 பாரம்(டன்) ஏற்றிச்செல்லக்கூடிய சுமையூர்திகளில் 8 பாரம்…