தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனிப் பகுதியில் பேணுகையின்றி இயங்கும் அரசுப்பேருந்துகள்   தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.   சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய…

தேனிச்சந்தையில் எடைமோசடி

தேனிப்பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்   தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   தேவதானப்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். இதனையொட்டி எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், புல்லக்காபட்டி, மஞ்சளாறு அணை, காமக்காபட்டி முதலான பல ஊர்களில் இருந்து தங்களுடைய வாரத்தேவைகளுக்கான காய்கறிகள், பருப்புவகைகள், கிழங்கு வகைகள், ஒன்பான்கூலங்களை(நவதானியங்களை) வாங்கிச்செல்வார்கள்.   வாரச்சந்தைக்கு கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான காய்கறி வணிகர்கள் வருகை…

தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை – தற்கொலை அவலம்

  தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை-பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் அவலம் தேனிமாவட்டத்தில் கந்துவட்டிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேவதானப்பட்டி வேளாண்மை செழித்த பூமியாகும். மேலும் இதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், கெங்குவார்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளும் வேளாண்மை நிறைந்த பூமியாகும். இப்பகுதியில் வாழை, நெல், தென்னை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களை உழவர்கள் பயிரிட்டு வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய மழையில்லாததால் சோலைவனமாக இருந்த இப்பகுதி பாலைவனமாக மாறியது. இதனால் உழவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன்கள் வாங்கியும் தங்கள் நகைகளை அடமானம் வைத்தும் உழவுத்தொழில் பார்த்து…

தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் மருமக்காய்ச்சல்-பொதுமக்கள் பீதி

  தேனிமாவட்டத்தில் பரவி வரும் மருமக்காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் மருமக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை இக்காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இக்காய்ச்சல் வந்தவுடன் கண்களில் இருந்து நீர் வருதல், கை, கால்கள் சோர்வடைதல், உணவு உண்ணாமை போன்ற உடற்கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் இக்காய்ச்சல் ஏறத்தாழ 10 நாள்வரை நோய்தாக்கியவர்களைத் தாக்குகிறது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வருவதால் அண்மையில் உள்ளவர்களுக்கும் இந்தத் தொற்றுநோய் பரவுகிறது. தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்…

மழையால் சேதமடைந்த சாலைகள்

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தல்   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.   தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு வரை செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து காமக்காபட்டி செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்கின்ற சாலையும் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.   மேலும் சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் கடையில் மழைத்தண்ணீர் தெளிக்கக்கூடாது என்பதற்காகச் சாலைகளில் கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால்…

தேனி மாவட்டத்தில் புத்துயிர் பெறுமா வெல்லம் உற்பத்தித் தொழில்?

  தேனி மாவட்டத்தில் வெல்ல உற்பத்தித் தொழில் நலிவடைந்துள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், மஞ்சளாறு அணைப்பகுதிகளில் கரும்புகளில் இருந்து வெல்ல உற்பத்தித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. உழவர்கள் தங்கள் தோட்டத்தில் வெல்லம் உருவாக்கத்தேவையான குடிசைகள், கலன்கள், அடுப்புகள் போன்றவற்றை அமைத்து அதற்கு ஆட்களையும் வைத்திருப்பார்கள். கரும்பு முற்றியவுடன் கரும்புகளை ஆட்டிக் கொதிகலன்களில் சூடாக்கி வெல்லம் உற்பத்தி செய்வார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுமைக்கும் பிறமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்திருந்தனர்.  …

கொடைக்கானல் செல்லும் சாலை மூடப்பட்டதால் வெறிச்சோடிய உணவகங்கள்

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை அருகே ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.    இப்பகுதியில் இதுவரை 110க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கொடைக்கானல் செல்லும் பாதையை நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் கொடைக்கானல் செல்பவர்கள் தாண்டிக்குடி, பழனி வழியாகக் கொடைக்கானல் சென்றனர். இப்போது இருசக்கர, சிறிய வகை ஊர்திகள் மட்டுமே பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.    இந்நிலையில் மலைப்பகுதியில் தொடர்ச்சியாகத் தொடர்ந்து மழை பொழிவதால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்…

மருந்துகளைத் தெளித்து மீன்களைப் பிடிக்கும் மருமக் கும்பல்-நோய்கள் பரவும் பேரிடர்

  தேனிப் பகுதியில் மருந்துகள் தெளித்து மயக்கமடையச் செய்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உடலுக்குக் கேடு விளையும் கண்டம் உள்ளது.  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி பகுதிகளில் ஆறுகளில் உள்ள பாறைகள், பாறைகளின் இடுக்குகள், ஆறு, கண்மாய், ஓடைகளில் உள்ள சந்து பொந்துகளில் குரவை மீன்களும் வேறு சில வகை மீன்களும் வாழுகின்றன. இவ்வகை மீன்களை வலைவீசியோ தூண்டில் போட்டோ பிடிக்க முடியாது. இவ்வகை மீன்கள் விலையும் அதிகம்.  இதனால் இவ்வகை மீன்கள் வாழும் இடத்தைக் கண்டறிந்து மீன்கள்…

தேனிப்பகுதியில் 200 உரூபாய் வரை விற்பனை ஆகும் புற்றீசல்கள்.

தேவதானப்பட்டிப் பகுதியில் ஈசல்கள் படி 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஈசல், ஆங்கிலத்தில் இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று அழைக்கப்படுவது உண்டு. கறையான் இனத்தைச்சேர்ந்த ஈசல் படி ஒன்று 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. அக்டோபர், நவம்பர், திசம்பர் வரை மழைக் காலம் என்பதால் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றது. பெரும்பாலும் கறையான் புற்றுகளில் வாழும் ஈசல்கள் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறும். மாலை நேரம் ஆனவுடன் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கும். ஈசல் இறக்கைகள் மென்மையாக இருப்பதனால்…

தேனிப் பகுதியில் தொடர்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனிப்பகுதியில் பகுதியில் தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டிப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டும் சில இடங்களில் விடாமல் தொடர்ந்தும் மழை பெய்துவருகிறது. இதனால் சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் பண்டிகைக்காலத்தில் யாரும் வெளியே தலைகாட்டமுடியாத அளவிற்கு மழை பொழிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.