மோடிக்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
பா.ச.க.வின் தலைமையாளர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட குசராத்து முதல்வர் நரேந்திரர் பாராட்டப்பட வேண்டியவர். தேர்தல் வெற்றிக்காகக்கூடப் போலியான வாக்குறுதி தராதவர் என்றால் அவரைப் பாராட்டத்தானே வேண்டும்? வேறு வகையில் என்றால் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள் தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே! எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார். தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம்! தமிழினத்திற்காகவும் தமிழ்…
ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ
இராசபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ இலங்கை அதிபர் இராசபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத்தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார்: மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக்கூட்டங்களை விட 22- ஆவது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக…
கல்விமொழியும் தமிழே! மத்திய அலுவலக மொழியும் தமிழே! – ம.தி.மு.க. தீர்மானம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 22-ஆவது பொதுக்குழு 04.02.2014 செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:- தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும் தமி்ழ்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய சனதா…