அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா
அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார். கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன்…
காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம் : நூல் அறிமுகம்
புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00 அடையாறு காந்திநகர் மன்றம் அருகில் காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம் நூல் அறிமுகம்: மரு.வி.கிருட்டிணமூர்த்தியின் (மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்& இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்) ‘சிகரம் பேசுகிறது’ பங்கேற்போர்: இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி) சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி) முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்) நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி அன்புடன் வையவன்
பாலச்சந்தர் – ஒரு சகாப்தம் : நினைவேந்தல்
அடையாறு கலை இலக்கியச் சங்கம் பாலச்சந்தர் – ஒரு காலக்கட்டம்: நினைவேந்தல் தமிழ்மணம் இலக்கிய மனை, கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்), சென்னை மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30 அன்புடையீர், தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது. நடிகர் சாருகாசன், இயக்குநர் இலெனின், இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்), (அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ், எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன், கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி…
வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா
வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா மருத்துவர் மு.சீவகன், சிறுநீரக மருத்துவ வல்லுநர் மருத்துவர் சீ.இலட்சுமி பிரசன்னா சீவகன், மயக்கு மருத்துவ வல்லுநர் அன்புடையீர், வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராசன்] எம்.ஏ.,பி.எல், அவர்களின் அண்ணாவுமான எம்.எசு.பி..முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் 24 திசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு, காந்தி நகர் முதலாவது…
வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் ! – பாரதிபாலன் அழைப்பு
வையவன் 75 வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் ! பாரதிபாலன் அழைப்பு எழுத்தாளர் வையவன் அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் மார்கழி 9 / 24திசம்பரில் [புதன் கிழமை ] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் மன்றத்தில்(கிளப்பில்) நடைபெற உள்ளது. முதன்மைவாணர்கள் பலரும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் தொடக்கம், இதயத்துடிப்பு இதழ் வழங்கல், ஆரூத்ரா மாத ஏடு தொடக்கம்…
பழி வராமல் படி – பாவலர் வையவன்
ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…