வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. புலால் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 12. புலால் விலக்கல் புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும். புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்? அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை….

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 11. கொலை விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 11. கொலை விலக்கல் கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும். வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும். அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும். இயலு மிடத்தச் செயலைத் தடாமை. நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். கொலை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. உடம்பை வளர்த்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9. தொடர்ச்சி)    10. உடம்பை வளர்த்தல்   உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி. உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும். உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல். உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும். உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும். உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும். உரனிலா வுடம்பு வரனிலா மங்கை. வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது. உளந்தொழில் செயற்கு முடலுரம்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9.மனத்தை யாளுதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8 தொடர்ச்சி)   9 9. மனத்தை யாளுதல் மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி. ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும். நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது. மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது. அறனு மறனு மறிதிற னிலாதது. மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும். மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும். அதனெறி விடாஅ…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8. தன்னை யறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. தொடர்ச்சி) 8 தன்னை யறிதல்   71.தன்னை யறித றலைப்படுங் கல்வி. தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும். மனிதரி லுடம்பு மனமான் மாவுள. மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு. காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும். உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம். உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும். உடம்பு மனமுமா ளுயரறி வான்மா. உடலையும்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. ஆசிரியரை யடைதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6 தொடர்ச்சி) 7 7.ஆசிரியரை யடைதல்   அறிவினைத் தருபவ ராமா சிரியர். அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார். இருபா லாருந் தருவதற் குரியவர். ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர். அறிவு வகையா னாசிரி யர்பலர். பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர். எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது. ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது. அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல். மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி) 6. நல்லினஞ் சேர்தல் நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும். நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள். அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள். தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் . நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார். உலகிய லெல்லா முணர்ந்து…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4  இன் தொடர்ச்சி)  வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 5.தீயினம் விலக்கல் தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே. தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும். தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர். தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள். 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள். பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள். துணைவரல் லாரை யணையுமா வினத்தர். தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர். அறிவினை மயக்குவ வருந்து…