வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி) 6. நல்லினஞ் சேர்தல் நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும். நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள். அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள். தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் . நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார். உலகிய லெல்லா முணர்ந்து…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4 இன் தொடர்ச்சி) வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 5.தீயினம் விலக்கல் தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே. தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும். தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர். தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள். 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள். பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள். துணைவரல் லாரை யணையுமா வினத்தர். தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர். அறிவினை மயக்குவ வருந்து…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்
மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 3.தாய்தந்தையரைத் தொழுதல் தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர். அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும். அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும். அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. அவர்களின் அறிவுரைகளை அறிந்து…
மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார்
மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார் ஆணும் பெண்ணும் அது செயவுரியர் இளமைப் பருவம் இயைந்ததற்கே மற்றைய பருவமும் வரைநிலையிலவே அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல் அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல் தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல் தக்க ஆசிரியரால் இன்னியலறிதல் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல் இறைவன் நிலையினை எய்திட முயறல் மாணவரியல், மெய்யறம்: ஈகச் செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)
வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்
வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….
