வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. புலால் விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 12. புலால் விலக்கல் புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும். புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்? அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 11. கொலை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 11. கொலை விலக்கல் கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும். வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும். அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும். இயலு மிடத்தச் செயலைத் தடாமை. நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். கொலை…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. உடம்பை வளர்த்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9. தொடர்ச்சி) 10. உடம்பை வளர்த்தல் உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி. உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும். உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல். உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும். உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும். உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும். உரனிலா வுடம்பு வரனிலா மங்கை. வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது. உளந்தொழில் செயற்கு முடலுரம்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9.மனத்தை யாளுதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8 தொடர்ச்சி) 9 9. மனத்தை யாளுதல் மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி. ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும். நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது. மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது. அறனு மறனு மறிதிற னிலாதது. மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும். மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும். அதனெறி விடாஅ…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8. தன்னை யறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. தொடர்ச்சி) 8 தன்னை யறிதல் 71.தன்னை யறித றலைப்படுங் கல்வி. தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும். மனிதரி லுடம்பு மனமான் மாவுள. மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு. காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும். உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம். உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும். உடம்பு மனமுமா ளுயரறி வான்மா. உடலையும்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4 இன் தொடர்ச்சி) வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 5.தீயினம் விலக்கல் தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே. தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும். தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர். தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள். 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள். பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள். துணைவரல் லாரை யணையுமா வினத்தர். தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர். அறிவினை மயக்குவ வருந்து…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்
மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 3.தாய்தந்தையரைத் தொழுதல் தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர். அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும். அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும். அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. அவர்களின் அறிவுரைகளை அறிந்து…
மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார்
மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார் ஆணும் பெண்ணும் அது செயவுரியர் இளமைப் பருவம் இயைந்ததற்கே மற்றைய பருவமும் வரைநிலையிலவே அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல் அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல் தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல் தக்க ஆசிரியரால் இன்னியலறிதல் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல் இறைவன் நிலையினை எய்திட முயறல் மாணவரியல், மெய்யறம்: ஈகச் செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)
வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்
வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….