மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி இரவு 2018
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு பெற்றுப் பண வசதியின்மையால் படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில் …