முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

  முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத் தமிழ்மீது விருப்பம் இல்லையே!     நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்!  அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின்  வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம்.    இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில்  கையொப்படமிட வேண்டும் என்று ஓர்  ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் …

தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!

குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா?     இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும்.  கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…

எரிநெய், எரிவளி விலையை ஏற்றியவர்களுக்குத் தண்டனை கொடுங்கள்: வைகோ

 எரிநெய், கன்னெய். எரிவளி விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார். திருபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து அம்பத்தூர்  பேருந்து நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை  தேர்தல் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: “இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் அன்புமணி இராமதாசைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்….