ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல!   மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன.  தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான  நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர்.  தில்லி  ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி…

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!   தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர்.   நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…

தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்

 தில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து  கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று  நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கே கூடியிருந்த   ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து   சட்ட மன்றத் தேர்த்லில்  வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை  உறுப்பினர்களாகப்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.  அமைச்சுப் பொறுப்புகள் நிதித்துறை,  மின்துறை ஆகியவற்றை முதல்வர் கெசுரிவால் வைத்துக் கொண்டுள்ளார். சோம்நாத் பாரதிக்குச் சட்டம்-சுற்றுலாத் துறையும், கிரிசு சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு,…