இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு

(இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1 இன் தொடர்ச்சி) 2   பாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும்.   ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது.   பன்னாட்டு அமைப்புகளில்…

இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு

1  பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று! அதுதான் இது!   பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்….