கவி ஓவியா இலக்கியமன்றம், திறனாய்வுத் திருவிழா – மன்னை பாசந்திக்குப் பாராட்டு

கவி ஓவியா இலக்கியமன்றம் திறனாய்வுத் திருவிழா “சிறுதுளியில் சிகரம்” நூலாசிரியர் மன்னை பாசந்திக்குச் சாகித்ய அகாதமியைச் சேர்ந்த முனைவர் இராமகுருநாதன்  பாராட்டிதழ்  வழங்கல்  நாள் :  ஐப்பசி 30, 2045 நவம்பர் 16, 2014 சென்னை

நயம் மிக்கச் சங்கக்கவியும் கற்பனை வறண்ட இடைக்காலக் கவியும் – பேரறிஞர் அண்ணா

  கையில் ஊமையர்   ஒரு   மாதத்திற்கு  முன்  சங்க  இலக்கியங்களில்  ஒன்றான குறுந்தொகையில், ஓர்  உவமையைப்  படித்தேன்.  இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வேறுபாட்டைப் பாருங்கள்!   இந்தக் காலத்துப் புலவர்கள்  எந்தக்  கருத்தை  ஓர்  அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறி   விட்டார்.  அந்த   அடிதான்  ‘கையில்  ஊமன்’ என்பதாகும்.   ஒரு  தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்!  கட்டுங்கடங்காத  காளை; …