ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்   சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘கியூ’ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஐயத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பைப்பறி(பிக் பாக்கெட்டு), வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர்…

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.   ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது.   ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…

ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு

[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு;  இறந்தவர் தன் மகன்  பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்;  முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு;  வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு;   நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம்.  – ஆசிரியர்] ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு  “மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு ஊரில்…

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு

  “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் விசயகாந்து தெரிவித்தார். தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர்  சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு  திரட்டினார். அப்போது, விசயகாந்து பேசிய தாவது: “தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே…

நாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்!

  மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த  ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:-  “குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில்  கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில்  முன்னேற்றம் அடையவில்லை.  அதேபோல், தமிழ்நாடு  அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள்….