இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்   – பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-7

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-7 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.    அதன் ஏழாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதப்படலம், காப்புப் படலம், தாடகைக் கொலைப்படலம், மிதிலைப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.    தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி…

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4 புதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர்  நெ.நடராசன் வரவேற்றுப்…

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார். சித்திரை 30, 2049  / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.  புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.  புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன்…

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை   தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறும் பகைசிறி தின்றி இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும் வடதலை நாட்டை ஆரிய ரென்னு மயலவர் தங்கள் பேரறி யாத பெருமையி னாண்டாள்.     விந்த வடக்கு…

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை   அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை  கள்ளர் என்றும் மறவர்என் றுங்கடைப் பள்ளர் என்றும் பறையர்என் றும்பழித்து என்ன நொந்தும் இயல்பில் திரிகிலா மன்னர் ஆம்தமிழ் மக்களைப் போற்றுவோம் – புலவர் குழந்தை : இராவண காவியம்