இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79

வ.உ.சிதம்பரனார், மறைமலையடிகள், சி.இலக்குவனார் புகழ் போற்றும் விழா: புரட்டாசி 04, 2047 / செட்டம்பர் 20, 2016 மாலை 6.00 – இரவு 9.00 இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் ஆடற்கலையரங்கம் பேச்சுக்கலைப் பயிற்சி யரங்கம் பரிசுவழங்கிப் பாராட்டரங்கம் எண்கண்மணி

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 தொடர்ச்சி) 09   தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08   “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி) 07   ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது.   தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )              செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) 06   “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05   இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.   திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)   04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03   “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.   “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 2: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத              வாழ்வு கண்ட தமிழகம்        மகிமை கெட்டே அடிமைப் பட்டு              மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல்லாரே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே,   தமிழ னென்ற பெருமை யோடு              தலைநி மிர்ந்து நில்லடா!        தரணி யெங்கும் இணையி லாஉன்              சரிதை கொண்டு…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 1: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01    இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே!…

இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 67

இலக்கிய வளர்ச்சிக் கழகம்  திருவாரூர் புரட்டாசி 11, 2046 / செப். 28, 2015 மாலை 6.30 – 9.00 சிலப்பதிகாரத் தொடருரை பாட்டரங்கம் பாராட்டரங்கம் மாணவர் அரங்கம் பரிசரங்கம்

இலக்கியவளர்ச்சிக்கழகம் – இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 54

திருவாரூர் புரட்டாசி 8, 2045 / 24.09.2014 உரையரங்கம்: அ.சாகுல்அமீது முனைவர் மு.அப்துல்காதர் அன்புடன் அழைக்கும் புலவர் எண்கண் சா.மணி