படை நீக்கமே நல்லிணக்கம் – ஒப்புக்கொண்ட சிங்கள அமைச்சர்

படைகளைத் திரும்பப் பெறுவது நல்லிணக்கத்துக்கு இன்றியமையாதது – ஒப்புக் கொண்டார் இலங்கை வெளியுறவு அமைச்சர்   படைகளைத் திரும்பப் பெறுவது என்பது நல்லிணக்கத்தின் முதன்மையான ஒரு பகுதி என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டுள்ளார்.   இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்னும் தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள் குவிக்கப்பட்டிருந்தது பன்னாட்டு அளவில் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாகி வந்தது.   இந்நிலையில், வாசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த இலங்கை…

பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு

பெறுமதியான பங்காளியா இலங்கை?     வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு.   இப்போது…