(வெருளி நோய்கள் 391-395 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 396-400 396. உடற்காய வெருளி – Traumaphobia / Traumatophobia உடற்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உடற்காய வெருளி. பெண்களுக்கும் குறைந்த கல்வி உடையவர்களுக்கும் உடற்காய வெருளி மிகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். பொதுவாகப்பெண்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் இவ்வெருளி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். trauma என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காயம் எனப் பொருள். 00 397. உடற்பயிற்சி வெருளி -Exercitophobia / Drapanophobia  உடற்பயிற்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சி வெருளி. உடற்பயிற்சியின் பொழுது இறப்பு நேர்ந்த…