தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!   நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்(மூதுரை 10). வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால் எல்லார்க்கும் விளையும் நன்மை என நாம் சொல்லலாம்.   பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன் செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில் அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார்.   பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்விநலனில் கருத்து செலுத்தும்  வண்ணம்…

நூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்

படைப்பாக்கப் பொதும உரிமப்பரவலாக்கலுக்குப் பாராட்டு! தொடர்நடவடிக்கைகளுக்கு வேண்டுகோள்   எல்லாத்தமிழ் நூல்களும் எண்மியமாக்கப்பட வேண்டும் என்பதே இணையத்தமிழ் ஆர்வலர்களின் உள்ளக்கிடக்கை. இது குறித்துப் பலரும் பேசியிருந்தாலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் முறையாக முறையீடு அளித்துத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எல்லா நூல்களையும் எண்மியமாக்கல் என்பது  பொதுவான கருத்து. அதைப் படிப்படியாக எப்படிச்  செய்யலாம் எனத் தெரிவித்துள்ளோம். முதலில் அரசுத் துறைகள், அரசுசார் நிறுவன  நூல்களை எண்மியமாக்க வேண்டும் என்பது போன்று படிநிலைகளை வேண்டியிருந்தோம்.    தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் ஆட்சிக்குழுவில் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குர்…

கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்

கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்   ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில்(தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்), கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும் அதன் முதன்மையை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும் கல்லூரிகள் தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றது. ஏட்டளவில் அறிவிப்பு நின்றுவிடாமல் செயல்பாட்டிற்கும் விரைந்து வந்து…