நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால்.             (நாலடியார், அறத்துப்பால், 3. யாக்கை நிலையாமை, பாடல் எண் 26) பாடலின் பிரித்து எழுதிய வடிவம் : நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்? பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 13 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 13 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 340) “உடம்பினுள் ஒதுங்கி யிருக்கும் உயிருக்கு நிலையான  இருப்பிடம் அமையவில்லையோ?” என வனவுகிறார் திருவள்ளுவர். தங்குமிடம் நிலையற்றது என்பதன் மூலம் உயிரும் நிலையற்றது என்கிறார் திருவள்ளுவர். “துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதற்கு நோய்கள்/நோயுயுரிகள் குடிகொண்டுள்ள உடலில் ஓரமாக உள்ள…