திருக்குறளில் உருவகம் 6 – பேராசிரியர் வீ.ஒப்பிலி

  (பங்குனி 30, தி.ஆ.2045 / ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)   வெள்ளத்தைப் போல் நீருக்கடியில் உள்ள பாறையும் தீங்கின் சின்னமாகிறது. உள்ளதை மறைப்பாரின் ‘இல்லை’ என்ற சொல் நீரினுள் பாறையாகிறது. இரவென்னும் ஏமாப்புஇல் தோணி கரவென்னும் பார்தாக்கப்பக்கு விடும்.   ஊர்நடுவேயுள்ள குளத்து நீர் ஈவாரின் செல்வத்திற்கு உருவகமாகிறது. ஈயாது செல்வத்தைச் சேர்ப்போரின் உள்ளம் இக்குறளில் பாறையாக மாறிவிடுகிறது. இரத்தல் உடைந்த மரக்கலம்; இரந்து வாழ்பவன் இறைவனின் திருவடியைப் பற்றாது, உடையும் மரக்கலத்தைத் துணை கொண்டு, பிறவிப் பெருங்கடலைக் கடக்க…

திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி

   (பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014   இதழின்  தொடர்ச்சி)    இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298)   வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை…

திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி

(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா?   கயவரை எண்ணிய…

திருக்குறளில் உருவகம் – 1

 -ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி  தலைப்புக் குறிப்பு.   உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன். முன்னுரை   திருவள்ளுவர் இயற்றிய குறள்…