தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார். “என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!” இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார் நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3)

ஏ. எம். கே. நினைவாக (3) (தோழர் தியாகு எழுதுகிறார் 18 : கரி படுத்தும் பாடு)) காக்கி மனப்போக்கு பொன்னப்ப(நாடா)ர் நெல்லை மாவட்டத்துக்காரர். ஆயுள் சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில்தான் சில ஆண்டுகள் கழித்து முடித்தார். பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அடைக்கலமும் இருளாண்டியும் சிவலிங்கமும் மற்றவர்களும் அந்தச் சிறையிலிருந்து தப்பிச் சென்ற போது பொன்னப்ப (நாடா)ர் அங்குதான் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் ஏதோ சிறைக் குற்றத்துக்காகத் திருச்சியிலிருந்து கடலூருக்கு மாற்றப்பட்டார். திருச்சி சிறையிலிருந்து தப்பிச்…

தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி

(தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி ஒரு நாள் ஏஎம்கே ஏதோ உடல்நலிவுக்காகச் சிறை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் உடம்பைக் காண்பித்து, மருந்து கேட்டார். மருத்துவர் சொன்னார்: ” இதோ பாருங்கள் ஐயா. இது கறுப்புக் குல்லா சிறை. இங்கே மருந்தெல்லாம் அவ்வளவாகக் கிடைக்காது. ஏதாவது வாணாளர்(லைஃபர்) சிறைக்குப் போய்விட்டீர்கள் என்றால்  நல்ல மருந்தாகக் கிடைக்கும்.” ஆக, நோய்க்கு மருந்து கொடுப்பதில் கூட கறுப்புக் குல்லாய் என்றால் பாகுபாடு! உணவு தொடர்பாகவும் கூட…

தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) கறுப்பும் வெள்ளையும் கடலூர் மத்தியச் சிறையானது பரப்பிலும் கொள்திறனிலும் சிறியதே என்றாலும், மிகப் பழமையான சிறைகளில் ஒன்று. அது கடலூர் நகரத்திலிருந்து சுமார் ஐந்து அயிரைப்பேரடி ( கிலோ மீட்டர்) தொலைவில், வண்டிப்பாளையம் கிராமத்தில், கேப்பர் குவாரி என்னும் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. ஆகவேதான் வண்டிப் பாளையம் சிறை, கேப்பர் குவாரி சிறை என்ற செல்லப் பெயர்களும் அதற்கு உண்டு….

தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1)

(தோழர் தியாகு எழுதுகிறார் 15 : வறுமையும் அடிமைமுறையும்-தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (1) 20.11.2022: ஏஎம்கே என்று நாமறிந்த தோழர் ஏ.எம். கோதண்ட ராமன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள். தோழர் ஏஎம்கே மறைந்த சில நாளில் அவர் குறித்து முகநூலில் எழுதிய இடுகைத் தொடரைத் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நான் ஏற்கெனவே அவரது சிறை வாழ்க்கை குறித்து கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியதை (தேவையான சில திருத்தங்களோடு) ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.] கைதி செத்தால்… கறுப்புத் திரைகள் திருவோணம்…