அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்? – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்?   உலகில் தோன்றிய மக்களுக்குத் துன்பமும் அச்சமும் வந்தபொழுது இறைநம்பிக்கையும் வந்துள்ளது. துன்பம் தீராதபொழுதும் அச்சம் தேவையற்றது என உணர்ந்த பொழுதும் இறைமறுப்பும் வந்துள்ளது. உலகெங்கும் இறைநம்பிக்கையும் இறை மறுப்பும் காலந்தோறும் இருக்கத்தான் செய்கின்றன. உலகளாவிய தற்சார்பு வலைமத்தின் (Worldwide Independent Network) 2014 ஆம் ஆண்டிற்கான ‘சமயமும் நாடுகளும்’ என்னும் புள்ளிவிவரப்படி உலகில் மக்கள்தொகை அடிப்படையில் கிறித்துவம், இசுலாமிற்கு அடுத்து 3-ஆவது இடத்தில் இருப்பது இறை…

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்!  கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்  இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது.  இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக…

மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக!    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா,  தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார்.   விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம்…

புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – கனிமொழி

  சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்  –  நெல்லையில் கனிமொழி   மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துச் சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்து கொண்டு  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  பின்வருமாறு பேசினா் : சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டா என்று ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.   கல்வியில் மாநில அரசின் உரிமையில்…

எழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்

  கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.   விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார்.   இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தில் சான்றுரை வழங்குகையில், விடுதலைப்புலிகள் சிங்களப்படையிடம் சரணடைவது, பன்னாட்டு ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் இந்தியாவும் பங்கு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   அப்பொழுது…

தேர்தலுக்காக செயலலிதா சமயச்சார்பற்ற வேடம் அணிந்துள்ளார்: கனிமொழி பேச்சு

நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து களக்காடு, வள்ளியூர், நெல்லை நகரம், மேலப்பாளையம் ஆகிய இடங்களில்  மாநிலங்களவை உறுப்பினர்  கனிமொழி  பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:– அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நெல்லை மாவட்டத்திற்கு, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து 1, 2– ஆம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அ.தி.மு.க. அரசு நிதி…