நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 17 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 16. தொடர்ச்சி) 4. பாரி மகளிர் பாரி என்பான், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது தொல்குடியிற் பிறந்தோன்; செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். ‘பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி’ எனவும், ‘பறநாட்டுப் பெருங்கொற்றனார்’ எனவும் வழங்குவது காண்க….