தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 வரி வடிமைப்பியல் தமிழைப்போலவே கன்னடத்திலும் உள்ளமை தமிழ்மொழியின் வடிவமைப்பு முறையையே(ORTHOGRAPHY) இந்தியமொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி-வடிவமைப்பு  முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும்…

கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்!  குற்றவாளி ஒருவரை அவரது மதம், சாதி, கட்சி, நாடு, ஊர், இனம், அமைப்பு சார்ந்து குற்றவாளியாகத் திரிப்பது தவறு. ஆனால், பல நேரங்களில் அவ்வாறுதான் செய்திகள் வருகின்றன. இந்த ஊர்க்காரர் கைது, அல்லது இந்தச் சாதிக்காரர் செய்த கொலை இந்த மதத்துக்காரர் செய்த குண்டு வெடிப்பு என்பன போன்ற செய்திகளைப் பார்க்கிறோம். தனி மனிதத் தவறுகளைப் பொதுமை ஆக்குவது தவறாகும். ஆனால், அதே நேரம், ஒரு மதம் சார்ந்த அல்லது கோட்பாடு சார்ந்த குழு அல்லது அமைப்பு தங்களின்…

தமிழைப் புறக்கணித்த இடத்தில் கமல்

பெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின.  இவ்விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன்  என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் செய்தனர். தமிழ்க்கலை உலகைப் புறக்கணித்த கருநாடக விழாவில் கமல் பங்கேற்றது தமிழ்க்கலையுலகினரை அதிர்ச்சி யுறச் செய்துள்ளது. கலைக்கு மொழி வேறுபாடில்லை எனக் கூறி ஏமாற்றுவோர் தமிழைப்…