புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761) என்கிறார் திருவள்ளுவர். இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும்….

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!   இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல்   தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும்…