வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…

தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்