வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார். பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார்…

பேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் கா.சு.(பிள்ளை)   ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர்.  திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர்.  தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை  சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர்.  நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா (செட்டியார்) அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர்.  சென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின் …