இந்தியாவின் மொழிச்சிக்கல்

–       கூடலரசன்   இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே…

தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.   42.   ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…