வடநூல் இலக்கியங்களை விட சங்க இலக்கியங்கள் சிறந்தன.
பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன! வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப்பற்றைநாட்…
சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா
சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்ந்தெடுக்கும் சர்வ பண்டிதனாரம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர்நூலை அறிந்தோர் சொற்பம்; புராணக் கதையைப் போற்றிடுவோரே…
சங்க இலக்கியத்தில சமுதாயக் காட்சிகள் – ப. சீவானந்தம்
சங்காலப் பாடல்கள் கற்பனை ஆதிக்கம் கொண்டவை அல்ல. எதார்த்ததில் ஊறி நிற்பவை. அந்நாள் வாழ்க்கையும் இன்று போல் சிக்கலான வாழ்க்கை அல்ல . இயற்கையோடு இயைந்த எளிய சிக்கல் குறைந்த வாழ்க்கை. “வள்ளுவனின் கருத்துப் புரட்சியை இன்றைய உலகத்தில் தலைசிறந்த தத்துவஞானிகளுள் பெருமதிப்புப் பெற்றுள்ள ஆல்பர்ட்டு என்ற சிந்தனையாளர் தமது “இந்தியச் சிந்தனையும், அதன் வளர்ச்சியும்” ((Indian thought and its development) என்ற ஆராய்ச்சி வல்லநூலில் பிரமாதமாகப் பாராட்டுகின்றார். வேத கால இரிசிகளோடும், உபநிடத முனிவர்களோடும், கீதை ஆசிரியன் கண்ணனோடும் வள்ளுவனை ஒப்புநோக்கி…
கடல்வழி போக்குவரவினை முதலில் கண்டறிந்தவர் தமிழரே!
தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர்…
தமிழர்இசையின் சிறப்பைச் சங்க நூல்கள் இயம்புகின்றன.
காலத்தால் முந்தியும் கருத்தால் நிறைந்தும் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு எடுத்துக் காட்டியும் இலக்கியச் செம்மையில் சிறந்தும் விளங்குகின்ற சங்கப் பாடல்கள் இசைச் செய்திகளைப் பலவாறு பற்பல இடங்களில் கூறியுள்ளன. கிறித்துவுக்கு முன்னர் இரண்டும் பின்னர் இரண்டுமான நான்கு நூற்றாண்டுகளில் தமிழர் இசை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து உணரும் சிறந்த வாயில்களாகச் சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன. பண்ணும் பாடலும் பண்பட்டு வளர்ந்த நிலையை நன்குணருமாறு பல செய்திகளைச் சங்கச் செய்யுள்கள் தாங்கி மலர்ந்துள்ளன. – முனைவர் ஏ.என்.பெருமாள்: தமிழர்…
அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி
வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ் மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும் உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன் பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின் நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…
சென்னை வானொலியின் இலக்கிய வானம்- தொடர் சொற்பொழிவு
பங்குனி 09 -13 , 2046 / மார்ச்சு 23- 27, 2015
மின் ஊடகங்களில் சங்கச்சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் – கருத்தரங்கம்
மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி மார்கழி 24-26, 2045 / 08-10.2014 (மங்கல் நிறம். ஆதலின் தெளிவில்லை.)
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (நிறைவு) செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை (கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 5.2. இறைச்சி தொல்காப்பியர் இறைச்சியைப் பொருளியலில் மூன்று சூத்திரங்களில் (35 – 37) விளக்கியுள்ளார். ‘இறைச்சிதானேஉரிப்/பொருட்புறத்ததுவே’ என்பது முதல் சூத்திரம். அதில் உரி/ பொருள் என்ற இரண்டு பாடம் காணப்படுகிறது. இங்கு ‘உரிப்பொருள்’ என்ற பாடம் கொண்டால் அதுவும் மனிதவாழ்க்கை (உரி) ஆனது. கருப்பொருள், முதல்பொருள் (உரிப்புறத்தது) ஆகியவற்றால் தாக்கம்பெறும் என்று ஆகும். ‘அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே’ (பொருளியல்…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) செ.வை. சண்முகம்
(கார்த்திகை 21 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி) மையக்கருத்துரை 5. கூடுதல் பொருள் கருப்பொருள், உள்ளுறை, இறைச்சி என்ற இரண்டு நிலையில் கூடுதல் பொருள் உணர்த்துவதாகத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இலக்கியத்தில் இறைச்சியில் முதலும் கூடுதல் பொருள் உணர்த்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது (சண்முகம், 2009: 13, 2012: 300). 5. 1. உள்ளுறை கவிதையியல் நோக்கில் உவமையை உள்ளுறை உவமம், ஏனை உவமம் என வகுக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை 46 ) ‘தள்ளாதாகும் திணைஉணர் வகையே’ என்று…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்
(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை 4. தொல்காப்பியர் நோக்கு தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்த னவே பாடலுள் பயின்றவை நாடுங்…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி 4.1.1.முதலும் கருவும் ‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து பிள்ளை உள்வாய்ச் செரீஅய இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92). இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு….
