ஒன்பதும் ஒன்றும் பத்து! தமிழே நம் சொத்து ! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒன்பதும் ஒன்றும் பத்து தமிழே நம் சொத்து ! ஒன்றும் ஒன்றும் இரண்டு உழைப்பால் வெற்றி உண்டு  இரண்டும் ஒன்றும் மூன்று  முக்காலியின் கால்கள் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நாற்காலியின் கால்கள் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு மக்களின் அறிவு ஆறு ஆறும் ஒன்றும் ஏழு கடை வள்ளல் எண்ணிக்கை ஏழு ஏழும் ஒன்றும் எட்டு உடலில் சாணின் அளவு எட்டு எட்டும் ஒன்றும் ஒன்பது தொல்காப்பிய இயல்கள் மூ ஒன்பது ஒன்பதும் ஒன்றும்…

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?   பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன் கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை: பொங்கலன்று வருவாராம் புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம்…

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…