தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி) தீரன் திண்ணியன் தேசத் தலைவன் “களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87) “நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!” பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ை) – தொடர்ச்சி)   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ)  ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்:   தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ே) –  ‌தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை)  பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு: பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ்  உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) ……..  (இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு: )  இக் கொடுஞ்சிறை வாழ்வைப் பெற்றது ஏன்? இந்தி மொழி மட்டும் முதன்மை பெற்றால் ஏனைய மொழிகள் அழிந்தொழியும் என்றும் தமிழர்கள் தமிழ் மொழி வழியாகப் படித்தலே தக்கது என்றும் உரைத்ததும் இக் கொள்கைகளைப் பரப்ப ஒல்லும் வகையால் முயன்றதுமேதான் இச்சிறை வாழ்வை எனக்கு அளித் தன. யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த்தா இன்னும் விடுதலை பெற்றிலள்.  ஒரு…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ)  தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ)   சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்:   “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…

குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03 தொடர்ச்சி) குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது மட்டுமே, குறையற்றது எனக் கொள்ள முடியாது. இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையைக் குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர்.   இந்தக்…

எத்தனை நாள் சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்? பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03

(பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி : பாகம் – 02  தொடர்ச்சி) ஐயா, இன்னமும் எத்தனை நாள்  சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்? பேரறிவாளன்  குறிப்பேடு! தொடரும் வலி – பாகம்-03 [வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!]   அப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். 3 – 4 மாதங்களில் பிணை அல்லது ஓராண்டுச்…

126 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு – நரேந்திரருக்கு பக்சே அறைகூவல்

  சிங்களக்கொடுங்கோலர்களுக்கு நண்பர்களாகப் பலர் பா.ச.க. வில் உள்ளனர். இருப்பினும் நரேந்திர(மோடி) ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும்; இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நரேந்திரர் பதவியேற்பிற்கு இனப் படுகொலையாளி பக்சே அழைக்கப்பட்டான்;  மாபெரும் மாற்றம் நிகழப்போகிறது என்றெல்லாம் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனால், நரேந்திரர் அழைத்தது தந்திர வினையல்ல;  பக்சேவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியும் அல்ல. இங்கு வருமாறு அழைக்க வைத்த பக்சேதான் தந்திரவினையில் வல்லவன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 126 தமிழக மீனவர்கள் சிங்களப் படைத்துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளன….

தமிழக மக்களுக்காக நான் 27 முறை சிறைக்குச் சென்றுள்ளேன் : வைகோ உருக்கம்

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர்  குடியிருப்பு, புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, இராமசாமிபுரம், காமராசர் சிலை, நேரு  திடல், பாவடி தோப்பு  முதலான பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு  பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியபோது,   ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த  நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய சனநாயகக் கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடிச் சிறைக்குச்…

இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா

சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு. இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும். சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு  வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு. 1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய…

இந்தி எதிர்ப்பில் சிறை சென்ற செம்மல்கள், 1964

தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்புப் போரில் வெஞ்சிறை புகுந்துள்ள தமிழ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ, பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.ஏ, தோழர் எசு.சே. இராமசாமி, எம்.எல்.ஏ. தோழர் விழுப்புரம் சண்முகம், எம்.எல்.ஏ, தோழர் ஆ.தங்கவேலு, எம்.எல்.ஏ, தோழர் என் இராசாங்கம், எம்.எல்.ஏ, தோழர் அன்பில் தர்மலிங்கம் எம்.எல்.ஏ, தோழர் எம்.எசு.மணி, எம்.எல்.ஏ, தோழர் து.ப.அழகமுத்து, எம்.எல்.ஏ, தோழர் தியாகராசன், எம்.எல்.ஏ, தோழர் வெங்கலம் எஸ்.மணி, எம்.எல்.ஏ, தோழர் நாராயணன், எம்.எல்.ஏ, தோழியர் செகதாம்பாள் வேலாயுதம் எம்.எல்.ஏ, –      குறள்நெறி: ஆனி…