ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் : மாணவர்களுக்குப் பாராட்டு

மாணிக்கவாசகம் பள்ளியில் ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு      தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் இராசேசு வரவேற்றார்.   பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை கிளையின் சார்பாக…

மாணிக்கவாசகம் பள்ளியில் பாரதியார் விழா

மாணிக்கவாசகம் பள்ளியில்  பாரதியார் விழா தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா  நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர்  சீவா வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்கள்  சனசிரீ, ஐயப்பன்   “பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை” என்கிற பாடலையும், மாணவர்கள் கார்த்திகேயன், இராசேசுவரி, “பாரதியாரின் புதுமைப் பெண்” என்கிற தலைப்பில் அமைந்த கவிதையையும் பாடினார்கள். மேலும் பாரதியார் படத்துக்கு வண்ணம் தீட்டுதல், பாரதியார்  படம் வரைதல் ஓவிய போட்டியில் ஆகாசு, பாலமுருகன், அம்முசிரீ,…

மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு

தினமலர் பட்டம் –  பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு “அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?”  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி…

திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு  கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை….

வினைதீர்த்தான் நடத்திய தன்முனைப்புப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது. கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். [ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல் 2. பொருளாளர் திரு திருஞானம் ,  செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன்…