தமிழ்வாணி உதவுவாயே! – புதுமைக் கவிஞர் பாரதியார்

   தமிழ்வாணி உதவுவாயே!  தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே!   -சுப்பிரமணிய பாரதியார் தமிழ்வாணி படம் : நன்றி : தமிழ்வாணி பிரான்சு இதழ் +

புதுச்சேரி: சித்தர் இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கம்

பங்குனி 5.6 & 7, 2047 / மார்ச்சு 18, 19 & 20, 2016 ஆய்வுச்சுருக்கம் அனுப்புகை இறுதி நாள்: தை 27, 2047 / பிப்பிரவரி 10, 2016

தமிழ் வழிக் கல்வியே அறிவுடையோர் கொள்கை – பாரதியார்

  தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாத்திரங்களும் தமிழ் மொழி மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோர் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை அனுசரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை. பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்