‘தமிழ்நாடு’ எனத் தனிநாடுஅமையவேண்டியதே!

  சங்கக் காலத்தில் தமிழ் நாட்டின்பரப்பு, வடக்கே திருப்பதியிலிருந்தும் தெற்கே பூமையக்கோடு வரைக்கும் பொருந்தி கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லைகளாக இருந்தன.   ஒருகாலத்து வடவிமயம் வரை, தமிழ்நாடாக இருந்தது. பின்னர் விந்தியமலைவரை சுருங்கியது. … பழைய தமிழ்நாட்டின் பரப்பைப் பெறமுடியாது போனாலும், எஞ்சியுள்ள தமிழ்வழங்கும் பகுதிகளை ஒன்றுபடுத்தித் தமிழ்நாட்டின் எல்லையை வரையறுத்தல் வேண்டும். இந்தியமாப் பெருங்கடலைக் குமரிக்கடல் என்றே அழைக்கச்செய்யவேண்டும். உலகப்பொது அரசு ஏற்படும் காலத்து நாம் உலக மக்களுள் ஒரு பகுதியினரே. மற்றைய கண்டங்களிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது நாம் ஆசியக் கண்டத்தினரே….

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….