தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.

(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3. 1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத்…

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ?  பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.   சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…

திருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! – தமிழரசி

திருவள்ளுவரா வைத்தார்? ஒரு பெயரில் ஈர் அதிகாரம்!   திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் ஈர் அதிகாரம் எப்படி வந்தது? அதுவும் “குறிப்பு அறிதல்” என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. எளியோரான…