மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி   கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள். கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர். பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம்…

மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது

மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது  கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியது!   அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக்  கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார்.  இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கெனவே…