பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை! – பரிதிமாற்கலைஞர்

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.   இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சற்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.   அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும்…

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர்.

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர். இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்மொழியின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம்.   வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள மொழியோடு இருவகை வழக்கமுள்ள…

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.   தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் மொழித் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்…

கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக! – பரிதிமாற்கலைஞர்

  தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம். இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விடத்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச்…

பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் வேறுபட்டால் தமிழ் வழக்கற்றுப் போகும்! – பரிதிமாற்கலைஞர்

    தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.   – பரிதிமாற்கலைஞர்

தமிழிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழர்க்கு முன்னரே அறிந்தவர் போல் காட்டிக் கொண்டனர்

  தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். – வி.கோ. சூரிய நாராயண சாத்திரி என்னும் பரிதிமால் கலைஞர்: தமிழ் மொழியின் வரலாறு: பக்கம் – 27