86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று…
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும். கனடா தொரண்டோ நகரில் புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 ஆகிய நாள்களில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் பொழுது பின் வருமாறு விருதுகள் வழங்கப் பெறும். தகுதியானவர்கள் தங்கள் தகைமை குறித்த விரவங்களை அனுப்பலாம். பிறரும் தக்கவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அனுபப் வேண்டிய மின்வரி thamizh.kazhakam@gmail.com 1. இலக்குவனார் விருது தொல்காப்பியத்தைப்…
காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து -இரெங்கையா முருகன்
முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து தமிழ் ஆய்வுலகில் மிக முதன்மையான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா(பிள்ளை). அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார். உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து…
மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி : முகம்மது இராபி
மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ஓலைச்சுவடி மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார். பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் தொடங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, மாழை(உலோக)த்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவற்றை எழுதக் கூடிய பொருட்களாகப் பயன்படுத்தினர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள்…
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்!
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்! தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக…
தங்கர்பச்சானின் ‘சொல்லத்தோணுது’ நூல் வெளியீடு
பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015 காலை 10.30 வெளியீடு: உ.சகாயம் இ.ஆ.ப. பெறுநர்: மேனாள் நீதிபதி சந்துரு ஆண்டு முழுவதும் நான் தமிழ் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய அரசியல்,சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா; தங்கள் வருகை எனக்கு மகிழ்வைத்தரும். மிக்க நன்றி! -தங்கர்பச்சான்
பதிப்பாளர்களின் 2016 கொண்டாட்டம்
தமிழ் இந்து நாளிதழ் – வாசகர் திருவிழா, சென்னை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான கொண்டாட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015 காலை 09.30 – நண்பகல் 1.00 எசு.இராமகிருட்டிணனின் “வீடில்லாப் புத்தககங்கள்” நூல் வெளியீடு
தமிழ் இந்து நடத்தும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
அன்பினிய நண்பர்களுக்கு., வணக்கம். மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய ஓவிய – கட்டுரைப்போட்டிகளைத் தொடர்ந்து தற்போது – 9,10-ஆம் வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டியையும், 11,12-ஆம் வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டியையும் நடத்துகிறது. தங்கள் பள்ளிப் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றிட ஆவண செய்யுங்கள். கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து – = மு.முருகேசன், முதுநிலைத் துணை ஆசிரியர் தி இந்து -தமிழ் நாளிதழ், கத்தூரி கட்டடம் 124, வாலாசா சாலை, சென்னை – 600 002. பேசி: 74013 29364….
கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் – தங்கர்பச்சான்
நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாகக் கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதுடன் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி…
அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான்
அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான் அப்பாதான் வேண்டும் – சிறார் ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதைச் சிறப்பாகச் செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்குக் கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும். ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச்…