பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்

பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’  வேதனையுடன் விடை பெறுகிறது! அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு, அன்பான வணக்கம். வாழ்த்துகள். ‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது. அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக் களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும்…

மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! – சு.குமணராசன், மும்பை

மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே!   உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள  தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும்.  சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு…